பாடசாலை கீதம்
அல்லாஹ் அருள்வாய், எமெக்கெல்லாம் அருள்வாய்
தொல்லை எம்மை விட்டகல துணைபுரிவாய்
அல்லாஹ் அருள்வாய், எமெக்கெல்லாம் அருள்வாய்
தொல்லை எம்மை விட்டகல துணைபுரிவாய்
ஆயகலை தேடி இங்கு ஓடி வந்து கூடினோம்
ஆயகலை தேடி இங்கு ஓடி வந்து கூடினோம்
நேயமருள்வாய் எமது நெஞ்சுகள் நிறைந்திடவே
அல்லாஹ் அருள்வாய், எமெக்கெல்லாம் அருள்வாய்
தொல்லை எம்மை விட்டகல துணைபுரிவாய்
பாடசாலை மாணவர்யாம் பாவாலுன்னை வேண்டினோம்
பாடசாலை மாணவர்யாம் பாவாலுன்னை வேண்டினோம்
பலம் தருவாய் எமது பண்புகள் உயர்ந்திடவே.
ஈழமோங்க ஞாலமோங்க ஞானமெங்கும் ஓங்கவே
நாமமோங்கவே நபியின் நாகரீக வாழ்வுமோங்க
அல்லாஹ் அருள்வாய், எமெக்கெல்லாம் அருள்வாய்
தொல்லை எம்மை விட்டகல துணைபுரிவாய்
அல்லாஹ் அருள்வாய், எமெக்கெல்லாம் அருள்வாய்
தொல்லை எம்மை விட்டகல துணைபுரிவாய்
தொல்லை எம்மை விட்டகல துணைபுரிவாய்