அதிபரின் அர்ப்பணிப்பான சேவைக்கு பாடசாலையின் நிறைவேற்று அபிவிருத்திக் குழுவினால் பாராட்டு

சாய்ந்தமருது GMM பாடசாலையின் அதிபர் ஜனாப் M.I.M. இல்லியாஸ் அவர்கள் இப்பாடசாலைக்கு மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆக்கபூர்வமாகவும் செய்துவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டி இரவு நேர விருந்துபசாரமும் ஞாபகச் சின்னமும் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் நிறைவேற்று அபிவிருத்திக் குழுவின் (SDEC) ஏற்பாட்டில் அதன் செயலாளர் பொறியியலாளர் M.I.M.றியாஸ் அவர்களின் தலைமையில் ஒலுவில் Food Park Restaurant இல் 20.11.2022 பி.ப 8.00 க்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது அதிபர் M.I.M. இல்லியாஸ் அவர்களால் பாடசாலையில் கல்வி மற்றும் பெளதீக வளங்களில் ஏற்படுத்தப்பட்ட துரித அபிவிருத்தி குறித்து அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் சிலாகித்து பேசப்பட்டதோடு எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அதிபர் அவர்கள் இப்பாடசாலையில் பலம் பொருந்திய நிறைவேற்று அபிவிருத்தி குழு ஒன்று தனக்கு பக்கபலமாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில்

கிழக்கு மாகாண முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் MTA நிஸாம் அவர்களும் கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் அல்-ஹாஜ் AM. சாஹிர் அவர்களும் பிரதி அதிபர் திருமதி குறைசியா ராபிக், உதவி அதிபர் அல்-ஹாஜ் MACL நஜீம் அவர்களும் ஆசிரிய ஆலோசகர் அல்-ஹாஜ் A. சஹரூன் மற்றும் SDEC உறுப்பினர்களான இம்தியாஸ், ஹஸீர், ஜெலீல், அஸ்மி, றியாழ் ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.