மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ் மாணவி 3ம் இடம்

மாகாண மட்டத்தில் 13/09/2023 அன்று இடம்பெற்ற போட்டியில் கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ் மாணவி M.I.I.அதாபாஹ் மனாரி மாகாண மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், பாடசாலைகளுக்கு இடையேயான மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற Recitation (Oral event) போட்டி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கடந்த 03.09.2023 இடம்பெற்றது. குறித்த போட்டியில் மேற்படி மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

அதிபர் M.I.M. இல்லியாஸ் அவர்களின் வழிகாட்டுதலுடனும் ஆசிரியர்களான Mrs. A.R. அஸ்மினா, லரீfபா பாரூக் மற்றும் M.I.F. சுலைனா ஆகியோர்களது நெறிப்படுத்தலுடனும் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் மாணவி M.I.I. அதாபாஹ் மனாரி மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை பெற்றுத் தந்ததுடன் மாகாண மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றார்.

இந்த மாணவி வலைய மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் கோட்ட மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் முதலாம் இடத்தையும் பெற்றமை விஷேட அம்சமாகும்.

W.M.I. இம்தாத் மற்றும் M.F. ஷிபானி ஆகியோரின் புதல்வியாவார்.

இந்த மாணவிக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திக் குழு சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.