பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் தொடர்பான தகவல் திரட்டு

அன்பின் கிழக்குவாழ் தமிழ் உறவுகளுக்கு

என் இனிய வணக்கம்.

நான் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் 23ஆவது அதிபர். (எம்.ஐ.எம். இல்லியாஸ் )

இப்பாடசாலையை கேற் முதலியார் மர்ஹூம் எம்.எஸ். காரியப்பரினால் 1928.மே-01 ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அத்தினத்திலிருந்து 1959 வரை கிழக்கு மண்ணைச் சேர்ந்த (மட்டக்களப்பு) தமிழ் அன்னையர்கள் அதிபர்களாக கடமையாற்றி பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது பாடசாலையின் பௌதீக வள விருத்திக்கும் அரும்பெரும் சேவையாற்றிச் சென்றிருக்கின்றார்கள். இதனை எமது சமூகம் என்றும் மறவாது.

இப்பாடசாலையின் அதிபர்களின் புகைப்படத்துடன் கூடிய விபரங்களைப் பெற்று சமூகத்திற்கு அறியச்செய்யும் செயற்றிட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கின்றேன். அதன் முதற்கட்டமாக பாடசாலையினால் அடுத்த வாரத்தில் வெளிவர இருக்கின்ற ஆங்கில சஞ்சிகை ஒன்றிற்கு பாடசாலையில் பொறுப்பு அதிபர்களாக கடமையாற்றியவர்களின் புகைப்படங்களை சேவையாற்றிய காலத்துடன் வெளியிட தீர்மானித்திருக்கின்றோம்.

எனவே, இதில் குறிப்பிடப்படும் பெயர்களையுடைய எமது பாடசாலையின் முன்னாள் அதிபர்களின் உறவினர்கள் யாராவது இருப்பின் ( மட்டக்களப்பு முதல் காரைதீவு வரை இருக்கலாம் ) அவர்கள் சில நேரம் கடல்கடந்த நாடுகளிலும் வசிக்கலாம். அப்படியானவர் அவர்களின் புகைப்படங்களை மிக விரைவாக எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலதிக விபரங்களுக்கு

எனது தொலைபேசி மற்றும் வட்ஸப் இல 077 69 67 67 3

1. Mrs. Aalia Seenithamby – 01.05.1928 – 01.03.1937

2. Mrs. Grace Sithamparapilli 01.03.1937 – 01.05.1940

3. Mrs. J.K. Valuppillaei 01.05.1940 – 02.08.1941

4. Mrs s. V Pathini 02.08.1941 – 31.12.1944

5. Mrs P. Sithampalam 01.01.1945 to 27.04.1945

6. Ms. K. Madalena 01.05.1945 – 01.06.1948

7. Ms. EA. Williams 01.06.1948 – 01.01.1959

8. Mr. T. Rasaiya 15.06.1962 – 14.05.1963

இப்பாடசாலையின் முதற்பெயர்

மட்/அரசினர் முஸ்லிம் பெண்கள் பாடசாலை.

Related Posts

Leave a Reply