2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில்

இவ்வருடத்திற்கான சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு கடந்த ( 2022.10.12) புதன் கிழமை பாடசாலையின் அதிபர் Mr. MI. Illiyas அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Mr. MS. Sahathul Najeem (SLEAS), Zonal Director of Education – Kalmunai அவர்களும், விஷேட அதிதிகளாக Mr. NMA. Maleek, ADE / DEO – Sainthamaruthu, Eng. A. Zahir, District Engineer – Kalmunai Zonal Education, Eng. MI. Riyas Mohammad Ismail – RDA (செயலாளர்/SDEC) மற்றும் ஏனைய SDEC உறுப்பினர்கள், பிரதி அதிபர் ஜனாபா கே.எம். றாபீக், உதவி அதிபரும் தரம் 5 பகுதித் தலைவருமான ஜனாப். MACL Najeem அவர்களும், பகுதித் தலைவர்களான திருமதி ஆர்.எம். றஸீட் மற்றும் திருமதி ஆர். ஏ. நாபீத் ஆகியோர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

இறுதியாக அதிதிகள், பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் நினைவுப் பரிசுப் பொருளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பகல் போசனத்துடன் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியது.